எண் சோதிடம்

பெயரின் கூட்டு எண்ணுக்கான சிறப்புகள்

1

முயற்சி திருவினையாக்கும் என்ற தன்னம்பிக்கை வார்த்தைக்கு ஏற்ப முயற்சியை பெரிதும் நம்பக்கூடியவர். எதையும் எளிமையாக புரிந்துகொள்வர்.கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்பதை புரிந்து மேலும் மேலும் கற்றுக்கொள்ள முயலவேண்டும்.எந்த போட்டிகளில் கலந்துகொண்டாலும் முதன்மையாக வர விரும்புவார்கள். அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ளவர்கள்.புதுமையானவற்றை கண்டுபிடிக்கக்கூடியவர்கள்.அரசுபதவி,அரசியல் ஈடுபாடும், தலைமை தங்கும் தகுதியும் கொண்டவர்.ஒரு சிலருக்கு முன்கோபமும்,சிலருக்கு புரட்சிகர சிந்தனையும் மேலோங்கி இருக்கும்

2

சுறுசுறுப்பு மிக்கவர்,அமைதியையும் சமாதானத்தையும் விரும்புபவர்.கடினஉழைப்பாளி,அனைவரையும் அனுசரித்து செல்பவர்,தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில்,கெட்டிக்காரர். அதிக சத்தத்தை விரும்பமாட்டார்கள்.கூச்சசுபாவமுடையவர்கள். மிகுந்த பொறுமைசாலி,பல்வேறு தகவல்களை கையில் வைத்திருப்பார்கள்.நம்பிக்கையானவர்,நிர்வாக திறமை மிக்கவர்.சிறிய விஷயங்களுக்காக நேரத்தை செலவிட்டு விட்டு பிறகு அதற்காக வருத்தப்படுவார்கள்.இசைமீது ஆர்வம்கொண்டவர்,அழகை ரசிப்பவர் எந்தவேளையையும் அழகுடன் செய்பவர்கள்

3

பேச்சுத்திறமை வாய்ந்தவர் கேளிக்கை போன்றவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நடனத்தில் ஆர்வம்கொண்டவர். நல்ல நட்புவட்டத்தையும் பெயர்-புகழ் ஆகியவை இயல்பாக அமைந்திருக்கும். கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றவர். பெரும்பாலானவர்கள் இசை உள்ளிட்ட கலைத்துறையில் இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். கவனத்தை சிதறவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி செயல்பட்டால்.வெற்றி கைகூடிவரும்

4

இவர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு ஒரு நேர்த்தியிருக்கும்.நம்பகத்தன்மை கொண்டவர்.குடும்பம் நட்புவட்டம் ஆகிய இரண்டு தரப்பிலும் அன்பை பெற்றவர். எதையும் கூர்ந்து ஆராயும் ஆற்றல் உடையவர். எதிர்பார்ப்பு இல்லாமல் எதையும் செய்பவர். பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருபவர் எதையும் உறுதியுடன் எதிர்கொள்ளும் திறன்வாய்ந்தவர். அனுபவ அறிவைக்கொண்டே எதையும் செய்துமுடிப்பவர். நாட்டுநலன் சார்ந்து யோசிக்கும் குணமுடையவர். இயற்கையையும் அழகையும் ஆராதிப்பவர்.எதையும் தீர்மானமாக முடிவு செய்பவர்.குடும்பத்தை நேசிப்பவர்

5

புதிய மாற்றங்களையும் பயணங்களையும் விரும்புவார்கள்.பலமொழிகளில் ஈடுபாடுஇருக்கும்.எழுத்தாற்றலும்,பேச்சாற்றலும் நிறைந்திருக்கும்.பதிப்பக துறையில் அதிகம் இந்த எண் காரர்கள் இருப்பார்கள்,ஆடம்பரம்,சுகபோகங்களில் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகமிருக்கும்,சிலர் குடிபோதைக்கும் அடிமையாகிவிடுவார்கள். கட்டுப்பாட்டை விருந்தவர்கள் சுய சிந்தனை உடையவர்கள்.எதையும் ஒழுங்காக செய்ய விரும்புவார்கள்.சுதந்திர பிரியர் பலவற்றையும் அறிந்துகொள்ள விரும்புவார்கள்.அதற்காக தீவிரம் காட்டுவார்கள் ஒரே இடத்தில் வேலை செய்வதை விரும்பமாட்டார்கள்.நண்பர்களையும் வேலையாட்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.ஒரு செயலை ஆரம்பித்தால் அதை முடிக்கும்வரை ஓயமாட்டார்கள்

6

சமூகத்திற்கும் தன்னை நேசிப்பவர்களுக்காகவும் பாடுபடும் குணமுடையவர்.சிலர் நல்ல மருத்துவர்களாகவும்,சிலர் ஆசிரியர்களாகவும் இருப்பார்கள்.தொண்டு செய்வதை மனமுவந்து செய்வார்கள்.எதிரிகளிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தான் செய்தசெயலை நியாய படுத்துவார்கள். குடும்பத்தினர்,வாழ்க்கைத்துணை, ஆகியவர்களிடம் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்கள். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது

7

அறிவாற்றலும்,மனஉறுதியும் கொண்டவர்கள் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். 7ம் என்னில் பிறந்தவர்கள் மிகச்சிறந்த ஆலோசகராகவும்,தத்துவஞானியாகவும், ஆன்மிகவாதியாகவும்,மிகச்சிறந்த சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். காலம் பொன்போன்றது என்ற பழமொழியை நன்கு உணர்ந்தவர்கள்.எந்த ஒரு செயலுக்கும் தீர்வை வைத்திருப்பார்கள்.தனிமையில் இன்பம் காணக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை புரிந்து கொள்வது கடினம். தன்னம்பிக்கை இவர்களின் மிகப்பெரிய பலமாகும்.தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் வல்லவர்கள்

8

எதையும் வெற்றிகொள்ளவேண்டும், எதிலும் வெல்லவேண்டும் என்று விரும்புவார்கள். புகழை விரும்புவார்கள் எதை செய்தாலும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள்.வியாபார நோக்கம் கொண்டவர்கள்.மற்றவர்களின் பாராட்டை எதிர்பார்ப்பார்கள்.சிறந்த நிர்வாத்திறமை கொண்டவர்கள்.தனக்கு கீழுள்ளவர்களின் மதிப்பையும் பாராட்டையும் பெறுவார்கள்.பதவிக்கு அலையமாட்டார்கள். எதிர்ப்புகளை படிக்கல்லாக பயன்படுத்துவார்கள். சிலர் மிகச்சிறந்த வியாபாரியாகவும் தொழிலதிபர்களாகவும் விளங்குவார்கள். தான் முன்னிலை பெறவேண்டும்,தன் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்பதை மனதில்வைத்து செயல்படுவார்கள்

9

பெருந்தன்மை கொண்டவர்கள்,எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள் உயர்ந்தநிலையை அடைய குறிக்கோளுடன் பணியாற்றுவார்கள்.சிலர் சிறந்த கலைனர்களாகவும்,சிறந்த கண்டுபிடிப்பாளர்களாகவும் விஞ்ஞானியாகவும் இருப்பார்கள்.பகுத்தறிவு மிக்கவர்கள் கற்பனைவாதிகள் பேச்சுதிறமையால் அனைவரையும் கட்டிபோட்டுவிடுவார்கள். சுதந்திரத்தைவிரும்புவார்கள்.தாங்கள் சார்ந்த துறையில் பெயர் பெறுவார்கள்

10

ஒன்றாம் எண்ணுக்கான அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும்


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

 

Back to Top