சோதிடம்

19.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: மன நிறைவான நாள். பிறருக்கு நன்மை செய்து மகிழ்வீர்கள்.

பரணி: ஆரோக்யம் பற்றிய பல நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

கார்த்திகை 1: குழந்தைகளின் மீது அதிக கண்டிப்பைத் திணிக்க வேண்டாம்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: உதவி செய்து மகிழ்வீர்கள். மனநிம்மதி அதிகரிக்கும்.

ரோகிணி: சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரும்.

மிருகசீரிடம் 1,2: நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: இழந்த அமைதி மீளும். மற்றவர் பிரச்னை ஒன்றைத் தீர்ப்பீர்கள்.

திருவாதிரை: கடந்த நாட்களில் பகைத்துக் கொண்டவர்கள் நட்பாவார்கள்.

புனர்பூசம் 1,2,3: குழந்தையை நல்ல முறையில் வளர்த்த விதம் பெருமிதம் தரும்.

கடகம்: 

புனர்பூசம் 4: மதியத்திற்கு மேல் குழப்பங்கள் நீங்கும்படியான செய்தி வரும்.

பூசம்: பழைய நண்பர்களால் சந்தோஷம் அளிக்கும் விஷயம் ஒன்று நடக்கும்.

ஆயில்யம்: குதுாகலமான நாள். பிரச்னை ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.

சிம்மம்: 

மகம்: புதிய வருமானத்திற்கு வழி ஒன்று தென்படும். சகோதர உறவு பலப்படும்.

பூரம்: நிதி விவகாரங்கள் மேம்படும். நண்பர்களால் மனம் லேசாகும்.

உத்திரம் 1: பேச்சில் அதிக கவனம் தேவை. எதிலும் நிதானம் அவசியம்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: உறவினர் வீட்டு விசேஷங்களில் முனைப்பாகப் பங்கேற்பீர்கள்.

அஸ்தம்: நிம்மதியை உணரும் நாள். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்பீர்கள்.

சித்திரை 1,2: நிதிக்காக வேண்டி குடும்பத்தினரைப் புறக்கணிக்க வேண்டாம்.

துலாம்: 

சித்திரை 3,4: நினைத்த விஷயங்கள் ஈடேறுவதற்கு அதிக முயற்சி எடுப்பீர்கள்.

சுவாதி: நிதி விவகாரங்களில் சற்று எச்சரிக்கை தேவை. பொறுப்பு கூடும்.

விசாகம் 1,2,3: தேவையற்ற கற்பனை காரணமாக மனக்குழப்பம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: பிரியமானவர்களுடன் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும்.

அனுஷம்: பெற்றோரை அனுசரித்து சென்று அன்பையும், ஆசியையும் பெறுவீர்கள்.

கேட்டை: அர்ப்பணிப்புடன் பணி செய்து உயர் நிலையை அடைவீர்கள்.

தனுசு: 

மூலம்: புதிய விவகாரங்கள் பற்றிய செயல்பாடுகளில் கவனம் அவசியம்.

பூராடம்: என்றைக்கோ செய்த முயற்சி காரணமாக எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

உத்திராடம் 1: பதற்றம் தீரும் நாள். உழைப்பால் உயர் நிலையை அடைவீர்கள்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: பணியில் குறுக்கீடுகள் வந்தாலும் உடனடியாக விலகும்.

திருவோணம்: குடும்பப் பொறுப்புகள் கூடுவதால் சோர்வு ஏற்படலாம்.

அவிட்டம் 1,2: பொருட்களின் பழுதுக்கான செலவுகள் பயந்த அளவுக்கு இருக்காது.

கும்பம்: 

அவிட்டம் 3,4: பல காலத்துக்குப் பிறகு இன்று அருமையான நாளாக அமையும்.

சதயம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.

பூரட்டாதி 1,2,3: நிதி விஷயங்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.

மீனம்: 

பூரட்டாதி 4: வாழ்க்கைத்துணை வழி உறவினரின் பகை தீரும். மகிழ்ச்சி கூடும்.

உத்திரட்டாதி: திட்டமிட்ட விஷயங்களில் தாமதம் நேர்ந்தாலும் நன்கு நிறைவேறும்.

ரேவதி: காலையில் வரும் நற்செய்தி ஒன்றால் மனம் மகிழ்ச்சியடையும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top