சோதிடம்

20.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: உபயோகமற்ற விஷயங்களை நினைக்காமல் விலக்குவது நல்லது.

பரணி: மனச்சாட்சிப்படி நடப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். நிம்மதியான நாள்.

கார்த்திகை 1: எதையும் ஆராயாமல் ஏற்க வேண்டாம். உறவுகளை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

ரோகிணி: நிதிநிலை உயர்வதற்காக நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் புதிய பொருள் சேர்வதற்கான முயற்சி எடுப்பீர்கள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: பகையொன்று நட்பாகும். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும்.

திருவாதிரை: பணியாளர்கள் பின்விளைவுகளை அறிந்து செயல்படுவது நல்லது.

புனர்பூசம் 1,2,3: மகிழ்ச்சியான நாள். உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்.

கடகம்: 

புனர்பூசம் 4: நல்லவர்களைப் பகைத்துக் கொள்வது தப்பு என்பதை உணர்வீர்கள்

பூசம்: எண்ணிய விஷயங்கள் சிறப்பாக நடைபெறும். பொறுப்பு அதிகரிக்கும்.

ஆயில்யம்: குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர வேண்டாம். மனநிம்மதி கூடும்.

சிம்மம்: 

மகம்: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் உள்ள ஒருவரின் மதிப்பு உயரும்.

பூரம்: நெருக்கமானவர்களின் தேவைகள் தெரிய வரும். பிறருக்கு உதவுவீர்கள்.

உத்திரம் 1: மற்றவர்களின் மனம் நோகக்கூடாது என்ற கவனம் தேவை.

கன்னி: 

உத்திரம் 2,3,4: பெண்களுக்குக் குதுாகலம் அளிக்கும் விஷயம் ஒன்று நடக்கும்.

அஸ்தம்: நட்பு வட்டம் விரிவடையும். சகோதரர்களால் உதவி கிடைக்கும்.

சித்திரை 1,2: மனதுக்கு நெருக்கமானவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

துலாம்: 

சித்திரை 3,4: விரதம், வழிபாடுகளில் ஈடுபாடு கூடும். சிறப்பான விருது வரும்.

சுவாதி: பரபரப்பான நாள். உறவினருடன் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விசாகம் 1,2,3: உங்களின் முயற்சியால் போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்டம் அடிக்கும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: பணியாளர்கள் புது உத்வேகத்துடன் செயல்பட்டுப் பாராட்டுப் பெறுவீர்கள்.

அனுஷம்: உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள் என்பதால் நலமடைவீர்கள்.

கேட்டை: விரும்பிய விஷயம் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

தனுசு: 

மூலம்: திட்டமிட்டபடி சில பொருட்களை வாங்குவீர்கள். மனதில் நிம்மதி கூடும்.

பூராடம்: வெற்றி பெறும் எண்ணத்தில் தவறான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

உத்திராடம் 1: இன்று வேலை விஷயமாக நற்செய்தி ஒன்று வரலாம்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: பெண்களுக்குச் சந்தோஷமான அனுபவங்கள் இன்று ஏற்படும்.

திருவோணம்: தள்ளிப்போட்ட விஷயங்களை முடிக்கும் நாள். நட்பு வட்டம் விரியும்.

அவிட்டம் 1,2: வெளிநாட்டிலிருந்து பணிக்கு அழைப்பு வரும். மகிழ்ச்சி கூடும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி காரணமாக இன்று அலுவலகப் பிரச்னைகள் தீரும்.

சதயம்: சுற்றியிருப்பவர்கள் உங்களைக் குழப்புவதற்கு அனுமதிக்க வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: குழந்தைகளுக்காக அலைந்து திரிந்த பிறகே பலன் கிடைக்கும்.

மீனம்: 

பூரட்டாதி 4: பழைய சம்பவங்களை அசைபோடும்படியான நபர்களைச் சந்திப்பீர்கள்.

உத்திரட்டாதி: உங்களின் சுய திறமைகள் வெளிப்படுவதால் வெற்றியும் பாராட்டும் உண்டு.

ரேவதி: மனம் மகிழும் நாள். பணியில் புதிய உத்திகள் தோன்றும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top