சோதிடம்

23.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: உடன் பணிபுரிபவர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வீர்கள்.

பரணி: புதிய நண்பர் கிடைப்பதால் நன்மை ஒன்று கிடைக்கும்.

கார்த்திகை 1: இத்தனை நாட்களை விட இன்று அதிக வழிபாடு செய்வீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: சிக்கலைத் தவிர்க்க சுலப வழியை கண்டறிந்து மகிழ்வீர்கள்.

ரோகிணி: தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதுமைகள் செய்வீர்கள்

மிருகசீரிடம் 1,2:. அலங்காரத்தில் ஆசை அதிகரிக்கும். செலவு கூடும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: பழைய கடன் உங்களை அவசரப்படுத்தி முடிக்க வைக்கும்.

திருவாதிரை: சிறு சிறு பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நிம்மதி அடைவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: சகபணியாளர்களுடன் சுமுகமாக நடந்து கொண்டு மகிழ்வீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிர்பார்த்த உதவியை பெறுவீர்கள்.

பூசம்: நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

ஆயில்யம்: அலுவலகப் பிரச்னை ஒன்று தீரும். மனநிம்மதி அதிகரிக்கும்.

சிம்மம்: 

மகம்: தன்னம்பிக்கை கூடும். புதுமைகள் செய்யத் திட்டமிடுவீர்கள்.

பூரம்: அலங்காரத்தில் ஆசை அதிகரிக்கும். பேச்சில் அறிவாற்றல் இருக்கும்.

உத்திரம் 1: அடைக்க வேண்டிய கடன்களை பற்றித் திட்டமிடுவீர்கள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: குடும்பப் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நிம்மதி காண்பீர்கள்.

அஸ்தம்: அலுவலக நண்பர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வீர்கள்.

சித்திரை 1,2: உங்களை விட உயர்ந்தோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: மற்றவர் சிரமத்தைப் புரிந்து கொண்டு உதவி செய்வீர்கள்.

சுவாதி: உங்களின் முயற்சியால் குடும்ப பிரச்னை தீரும். யோகமான நாள்.

விசாகம் 1,2,3: குதுாகலமான நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். சந்தேகம் தீரும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: விரும்பிய பொருள் ஒன்றை வாங்குவதற்கு அலைச்சல் இருக்கும்.

அனுஷம்: எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்க தாமதமாகும்.

கேட்டை: நிம்மதியான நாள். நின்றுபோன பணி ஒன்றைத் தொடருவீர்கள்.

தனுசு: 

மூலம்: மனதில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும்.

பூராடம்: முயற்சி செய்து சுயதேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

உத்திராடம் 1: தொழில், பணியில் உள்ள ரகசியம் ஒன்று தெரிய வரும்

மகரம்: 

உத்திராடம் 2,3,4: உடன் பிறந்தவர்களுடன் உல்லாசமாகப் பொழுதுபோகும்.

திருவோணம்: கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

அவிட்டம் 1,2: குறுக்கு வழிகளை எதற்காகவும் நாடவேண்டாம். நிதானம் தேவை.

கும்பம்: 

அவிட்டம் 3,4: செயல்களில் மிகுந்த கவனமும், நேர்மையும் தேவை.

சதயம்: பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சந்தோஷம் கூடும்.

பூரட்டாதி 1,2,3: முன்பு செய்த தவறுகள் இன்று தலைதுாக்க வாய்ப்புள்ளது.

மீனம்: 

பூரட்டாதி 4: உங்களை மற்றவர்கள் புதிர் போல் பார்ப்பார்கள்.

உத்திரட்டாதி: சிறு சிறு செலவுகள் கூடுதலாகும். நல்ல நண்பர்கள் கிடைப்பர்.

ரேவதி: பகையாய் நினைத்தவர் மாறுவர். பிள்ளைகளிடம் இருந்து நற்செய்தி வரும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top