சோதிடம்

24.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: எதிர்பாராத வரவுகள் வந்து மனதை மகிழ்விக்கும் நாள்.

பரணி: முயற்சி காரணமாக தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும்.

கார்த்திகை 1: நல்ல விஷயம் ஒன்றில் உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி அரசாங்கத்திடம் இருந்து வரும்.

ரோகிணி: சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் நல்ல முடிவை எட்டும்.

மிருகசீரிடம் 1,2: பணியாளர்களுக்கு ஏற்பட்டிருந்த தொல்லை அகலும் நாள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: பக்குவமாகப் பேசி அனுமதி ஒன்றைப் பெறுவீர்கள்.

திருவாதிரை: நீண்ட நாளையப் பிரச்னை ஒன்று தீரும். மகிழ்ச்சி கூடும்.

புனர்பூசம் 1,2,3: மனஉறுதியுடன் செயல்பட்டு இடரிலிருந்து வெளிவருவீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: மற்றவர் ஆலோசனையை கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு.

பூசம்: உடல் நலனில் கொஞ்சம் கவனம் தேவை. தாயாரால் நன்மை ஏற்படும்.

ஆயில்யம்: உங்களை விட்டு விலகிச் சென்றவரை பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

சிம்மம்: 

மகம்: பிறர் கூறும் ஆலோசனையை ஏற்க வேண்டும். நட்பு வட்டம் விரியும்.

பூரம்: ஆடம்பரப் பொருளின் சேர்க்கை அவசியமானதா என்று யோசியுங்கள்.

உத்திரம் 1: தொழில் ரீதியாக புதிய ஊர்களுக்கு செல்வீர்கள். முயற்சி பலிக்கும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: வீடு கட்டும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

அஸ்தம்: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிரமப்பட்டாலும் அதில் ஜெயிப்பீர்கள்.

சித்திரை 1,2: நண்பர் ஒருவர் நற்செய்தி ஒன்றை சொல்லி உங்களை மகிழ்விப்பார்.

துலாம்: 

சித்திரை 3,4: மகிழ்ச்சி சுற்றுலாவாக தொலைதுாரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

சுவாதி: தந்தை, தாயாரின் பாச மழையில் நனைவீர்கள். பணியில் சங்கடம் உண்டாகும்.

விசாகம் 1,2,3: பிள்ளைகளின் வாழ்வில் நல்ல திருப்பம் ஒன்று ஏற்படும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: சில நாளாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கும்.

அனுஷம்: எதையும் பலமுறை நன்கு யோசித்து செய்வது அவசியம்.

கேட்டை: உங்களின் முயற்சிகள் சற்று நிதானமாக பலன் தரும். நிம்மதி கூடும்.

தனுசு: 

மூலம்: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற அதிக முயற்சி தேவைப்படும்.

பூராடம்: நற்செய்தி ஒன்று கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திராடம் 1: குடும்பத்தினர் நடந்து கொள்ளும் முறை மனத் திருப்தி தரும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: ஆன்மிக நாட்டம் குறைவதுபோல் தோன்றும். பயம் நீங்கும்.

திருவோணம்: தொழில் ரீதியாக எடுக்கும் புது முயற்சி நல்ல வகையில் செல்லும்.

அவிட்டம் 1,2: தொலைபேசி வழித்தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்

கும்பம்: 

அவிட்டம் 3,4: முயற்சி கைகூடும். புதிய செலவுகள் செய்ய முன்வருவீர்கள்.

சதயம்: பொய்யர்களின் வாக்கை நம்பி நஷ்டப்படாமல் கவனமாக இருங்கள்.

பூரட்டாதி 1,2,3: காரணமே இல்லாமல் மனதில் சந்தோஷம் குடிகொள்ளும்.

மீனம்: 

பூரட்டாதி 4: சங்கடங்கள் நீங்கும். எதிர்பாராத விரயங்கள் குறையும்.

உத்திரட்டாதி: உடல் நலனுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.

ரேவதி: வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றித் திட்டமிடுவீர்கள்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top