சோதிடம்

26.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: இன்று பிசியாக இருப்பீர்கள். வருமான உயர்வு பற்றி செய்தி வரும்.

பரணி: சரியான தீர்மானங்களை முறையாக எடுத்து நிம்மதி அடைவீர்கள்.

கார்த்திகை 1: பணியிட ரகசியங்களைப் பகிர வேண்டாம். தந்தைக்கு நன்மை உண்டு.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: சிக்கலை ஊகித்து அதிலிருந்து முறையாக மீளுவீர்கள்

ரோகிணி: வாக்கினிலே இனிமை கூடுவதால் பணி, தொழில் சிறக்கும்.

மிருகசீரிடம் 1,2:. கல்விக்காக நிறையச் செலவுகள் செய்ய வேண்டி வரும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: தகுந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு ஆரோக்யத்தைப் பாதுகாப்பீர்கள்.

திருவாதிரை: தாயாருக்குப் பணியிடத்தில் பல நன்மைகள் உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: முதியோருக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்த்தைப் பெறுவீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: தந்தையின் ஆதரவால் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்

பூசம்: கவனமாக நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஆயில்யம்: நீண்ட நாளாக தள்ளிப்போன திருமணம் இன்று நிச்சயமாகும்.

சிம்மம்: 

மகம்: மூத்தோருக்கு உங்களால் நன்மை ஏற்பட்டு நன்றி சொல்வார்கள்.

பூரம்: சுபநிகழ்ச்சி கூடிவரும். ஆசிரியர்களுக்கு நன்மை கூடுதலாகும்.

உத்திரம் 1: நல்ல காலம் வந்துவிட்டதற்கான அடையாளங்கள் தெரியும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: வங்கி வேலைக்காகக் காத்திருந்தோருக்கு அப்பணி கிடைக்கும்.

அஸ்தம்: அரசாங்கத்திடமிருந்து நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.

சித்திரை 1,2: ஆடை, ஆபரணங்களுக்காக அதிகமாக செலவு செய்வீர்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: தாயாருக்கும் உங்களுக்கும் சண்டை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுவாதி: நல்லவர், கெட்டவர் யார் என்று ஆராய்ந்து நட்புக் கொள்ளுங்கள்.

விசாகம் 1,2,3: நீங்கள் யாருடன் மோதினாலும் அவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: கருத்துவேறுபாடு கொண்டவரிடம் இன்று மன்னிப்புக் கேட்பீர்கள்.

அனுஷம்: குழந்தைகளை அதிகம் கண்டிக்க வேண்டாம். வெற்றி வாய்ப்பு வரும்.

கேட்டை: பணியில் உள்ள ஆர்வம் காரணமாக அது பற்றி மேலும் கற்பீர்கள்.

தனுசு: 

மூலம்: குழந்தைகள் பற்றிய டென்ஷன் இன்றைக்கே சரியாகிவிடும்.

பூராடம்: அலுவலக விஷயத்தில் திடீரென்று நன்மை ஒன்று கிடைக்கும்.

உத்திராடம் 1: உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: உணவு விஷயத்தில் தந்தை கவனமாக இருக்க வேண்டும்.

திருவோணம்: வாழ்க்கைத்துணைக்கு ஏற்பட்டிருந்த பிரச்னை ஒன்று தீரும்.

அவிட்டம் 1,2: வீடு பற்றிய கவலை ஒன்று சரியாகும். நிம்மதி பிறக்கும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: புதிய விஷயங்களில் கவனமாகக் காலை எடுத்து வையுங்கள்.

சதயம்: சகோதர, சகோதரிகளுடன் இருந்த சிறு பிரச்னை ஒன்று தீரும்

பூரட்டாதி 1,2,3: சாப்பாட்டு விஷயத்தில் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்: 

பூரட்டாதி 4: இன்று யாரைப் பற்றியும் விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும்.

உத்திரட்டாதி: வம்பில் தலையிட வேண்டாம். புதிய விஷயத்தை தள்ளிவையுங்கள்.

ரேவதி: சுபச்செலவுகள் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். மகிழ்ச்சி கூடும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top