கவிதை

வாழ்க்கை

கோடை இரவில் கண்ணை பறிக்கும்

கொடி மின்னல் வானில் மின்ன

அதைப் பசுந் சாணத்தில் பிடித்து

தங்கக் கம்பியாய் மாற்றி காண்பிப்பதாய்

சொல்லித்திரியும் சிலர்... இன்னும் சிலர்

நாகத்தின் தலையிலிருந்து மாணிக்கக்கல்

கண்டு தருவதாய் சொல்லி பிதற்றல் .....

இப்படி ஏமாற்றிய வாழ நினைக்கும்

அலையும் சில நரிக் கூட்டங்கள்....இவர்கள்

பின்னால் வீணாய் மதி மயங்கி பொருளையும்

பொன்னான நேரத்தை வீணடிக்கும் ஏமாளிகள்

இவர்கள் இருக்கும் வரை ஏமாற்றல்

எங்கு போகும் இங்கேயே தங்கி இருக்கும்


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top