சோதிடம்

28.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: பேச்சிலும் பணியிலும் கவனமாக இருந்துவிட்டால் போதும்.

பரணி: பிள்ளைகள் நல்ல வழியில் வாழ்வை அமைத்துக்கொள்வார்கள்..

கார்த்திகை 1: பிள்ளைகளின் திருமணத்தை விமர்சையாக நடத்த திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: பணியிடப் பிரச்னைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள்.

ரோகிணி: மகனுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலை கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: தடைப்பட்ட விஷயங்கள் இன்று நல்ல விதத்தில் முடியும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் ஒருவருக்கு வாழ்க்கை துணை அமையும்.

திருவாதிரை: வாகனத்தை சீர் செய்வீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.

புனர்பூசம் 1,2,3: தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு கூடும்.

கடகம்: 

புனர்பூசம் 4: சிறிய செலவுகள் இருக்கும். புதிய நட்பு கிடைக்கும்.

பூசம்: இத்தனை நாள் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும்.

ஆயில்யம்: மனப் போராட்டங்கள் குறையும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்: 

மகம்: எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

பூரம்: முடிக்கப்படாமல் இருந்த பத்திர பதிவு பற்றி நல்ல செய்தி வரும்.

உத்திரம் 1: உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டு. நட்பு வட்டம் விரியும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை விரைந்து அடைப்பீர்கள்.

அஸ்தம்: தள்ளிப் போன வழக்குகள் சாதகமாகும். மனஸ்தாபம் நீங்கும்.

சித்திரை 1,2: இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் முடிவடையும்.

துலாம்: 

சித்திரை 3,4: தாயாருக்கு முதுகு, மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சுவாதி: வாகனத்தில் செல்லும் போது கவனமாகச் செல்லுங்கள்

விசாகம் 1,2,3: தாயார், அத்தையால் பல நன்மைகள் கிடைக்கும் நாள்.

விருச்சிகம்: 

விசாகம் 4: சொத்து வாங்கும் போது சான்றிதழ்களைச் சரி பார்த்து வாங்குங்கள்.

அனுஷம்: சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். மனம் அமைதியுறும்

கேட்டை: வெளிநாடு சம்பந்தப்பட்ட புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

தனுசு: 

மூலம்: எதிர்பார்த்த பணம் வந்து நிலைமையைச் சமாளிப்பீர்கள்.

பூராடம்: வீட்டில் அமைதி திரும்பும். பயம் நீங்கும். முகம் மலரும்.

உத்திராடம் 1: நோய் பற்றிய கற்பனையிலிருந்து மீளுவீர்கள். தோற்ற பொலிவு கூடும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள்.

திருவோணம்: வாழ்க்கைத்துணையின் பிடிவாதம் தளர்வதால் நிம்மதி வரும்.

அவிட்டம் 1,2: காணாமல் போன முக்கியப் பொருள் ஒன்று கிடைக்கும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: தீய நண்பர்களிடம் இருந்து ஒதுங்குவீர்கள். தன்னம்பிக்கை கூடும்.

சதயம்: எதிர்மறை எண்ணங்களை மனதைவிட்டு விரட்டுவது நல்லது.

பூரட்டாதி 1,2,3: முன்கோபத்தை குறையுங்கள். நட்பை பலப்படுத்திக் கொள்வீர்கள்.

மீனம்: 

பூரட்டாதி 4: பிறரிடம் கனிவாகப் பேசுவீர்கள். ஆபரணம் சேரும். பணம் வரும்.

உத்திரட்டாதி: பழுதாகி கிடந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

ரேவதி: பிறரது பாராட்டுக்கு மயங்க வேண்டாம். பணியில் கவனம் தேவை.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top