கவிதை

பழந்தமிழர் உணவை

இன்னும் ஐம்பது ஆண்டுகள் கடந்தால்

யாவரிடமும் அளவுக்கு மிஞ்சிய பணமும்

அடங்காத திமிரும் அளவில்லா நோயும்

அடுத்தோருக்கு உதவக்கூடாத எண்ணமும்

பெருகியே தழைத்து செழித்திருக்கும்

அறிவியல் பொருட்களே வழிநடத்தும் யாவரையும்

ஒட்டுத்துணி இல்லாமல் உலாவல் இருக்கும்

பட்டம் பறப்பதைப் போலவே பயணங்களும்

வட்ட வட்டமாய் மத்திரை வடிவில் உணவுகளும்

வகைக்கு பலவிதமாய் பசியையாற்றும்

உடம்பின் அச்சங்களும் உணர்வுகளும் பொய்யென

காமத்து இச்சையினால் பரிமாறுதல் ஏற்றுக்கொண்டு

பிள்ளைப் பெறுதல் மறுக்கப்பட்டு விலக்கப்படும்

பயிறுடுதல் என்பது பொற்றொழில் போலாகும்

மாதாமாதம் பிடிநிலத்துக்கும் வரிசெலுத்த வேண்டும்

உயிர் வளர்க்கும் பூதங்கள் ஒவ்வொரு விலையிலும்

அறிவை வளர்க்கும் கூடங்கள் பலவகை திருட்டிலும்

காக்க வேண்டிய அரசுகள் களவாணி முறையிலும்

உண்மையை உரைக்க வேண்டி ஊடகமும் ஊமையாய்

நல்லவைகளுக்கு எதிராய் இருக்குமே.

மருத்துவத் துறையினால் மாபெரும் அழிவுகள்

விதைக்கப்பட்டு மக்கள் யாவரும் கொத்து கொத்தாக

இறக்கவே வழிவகைகள் ஆக்கப்படும் பணமென்ற

காகிதத்திற்கு பயனுள்ள எல்லாம் சிதைக்கப்படும்

பழந்தமிழர் உணவை கையாண்டால் உய்யலாமே.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top