சோதிடம்

29.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: யாரைப் பற்றியும் வம்பு பேசாதவர்களுக்குப் பிரச்னை வராது.

பரணி: நகைச்சுவை என்று பேசுவது தவறாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கார்த்திகை 1: கடன் பிரச்னை பற்றிய பயம் நீங்கும். தாழ்த்திப் பேசியவர் மாறுவார்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: நல்லவர் நட்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

ரோகிணி: எதிர்ப்பு அடங்கும். வழக்கு சாதகமாகும். மகன் பற்றிய கவலை நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: தோலில் இருந்த பிரச்னைகள் நீங்கும். கற்பனை பயம் தீரும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: மறு முயற்சியில் வெளிநாடு செல்ல விசா கிடைத்து மகிழ்வீர்கள்.

திருவாதிரை: உடல் ஆரோக்யத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும்.

புனர்பூசம் 1,2,3: சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வந்து விழிப்பீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: பேச்சில் கட்டுப்பாடு தேவை. திடீர் பயணம் வரும்.

பூசம்: சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அந்தஸ்து உயரும்.

ஆயில்யம்: பொதுநல செய்கைகளில் ஈடுபட்டு புகழ் அடைவீர்கள்.

சிம்மம்: 

மகம்: உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது வேலை கிடைக்கும்.

பூரம்: உங்களை அலட்சியமாக நினைத்தவர்கள் வியப்பார்கள்.

உத்திரம் 1: மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்தம்: பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பதால் மகிழ்வீர்கள்.

சித்திரை 1,2: கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: மனதில் உள்ள குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

சுவாதி: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சி கூடும்.

விசாகம் 1,2,3: வீடு களைகட்டும். கனிவான பேச்சால் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்: 

விசாகம் 4: வீட்டில் நடைபெறும் விசேஷத்தால் சொந்த பந்தங்கள் தேடி வருவர்.

அனுஷம்: புதிய கலைகளைக் கற்பதிலோ, ரசிப்பதிலோ ஆர்வம் வரும்.

கேட்டை: குடும்பத்திலும், அலுவலகத்திலும் மகிழ்வான சூழல் நிலவும்.

தனுசு: 

மூலம்: புதிய பதவி உங்களை தேடி வரும். கவலைகள் மறையும்

பூராடம்: வேலையில்லாதவர்களுக்கு இன்று நல்ல வேலை கிடைக்கும்.

உத்திராடம் 1: அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நன்மை விளையும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: தைரியம் என்பது எல்லைமீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

திருவோணம்: பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களை செய்ய வேண்டாம்,

அவிட்டம் 1,2: செயலில் தாமதம் ஏற்பட்டாலும் நல்லபடியாக முடியும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: பிள்ளைகளின் வாழ்வில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

சதயம்: வாழ்க்கைத்துணைக்கு திடீர் நன்மைகள் ஏற்பட்டு வியப்பூட்டும்.

பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள்.

மீனம்: 

பூரட்டாதி 4: திட்டமிட்ட விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். நிம்மதி கூடும்.

உத்திரட்டாதி: நல்லுறவு பற்றிய முயற்சிகளில் சிறந்த பலன்கள் ஏற்படும்.

ரேவதி: முயற்சியில் வெல்வீர்கள். மேலதிகாரியை அனுசரித்து செல்வீர்கள்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top