சோதிடம்

01.05.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: விரும்பிய விஷயம் ஒன்று நல்ல முறையில் நிறைவேறும்.

பரணி: நேற்றைக்கு ஏற்பட்ட கவலைகள் தீர்ந்து நிம்மதி மீளும்.

கார்த்திகை 1: வெளிநாட்டிலிருந்து வரும் செய்தி ஆச்சரியப்பட வைக்கும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருந்து வெல்வீர்கள்.

ரோகிணி: உங்கள் சிரமங்களுக்கு நீங்களே காரணமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிருகசீரிடம் 1,2: பிறர் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று புலம்ப வேண்டாம்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: பெண்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

திருவாதிரை: நட்பால் ஆதாயம் உண்டு. பயங்கள் தீர்ந்து நிம்மதி வரும்.

புனர்பூசம் 1,2,3: சுற்றியிருப்பவர்களில் நல்லவர், தீயவர்களைக் கண்டறிவீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: வேண்டியவரின் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

பூசம்: நண்பர்களில் வேற்று மதத்தவர் ஒருவர் நன்மை செய்வார்கள்

ஆயில்யம்: பணியிடத்தில் பழைய பாணியை மாற்றி வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்: 

மகம்: ஆதரவாக இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புகழ் கூடும்.

பூரம்: உங்கள் செயல்பாடுகளில் கொஞ்சம் சிறிய மாற்றத்தை செய்வீர்கள்.

உத்திரம் 1: உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: உங்களால் பயனடைந்தவர்கள் இன்று உதவி செய்வார்கள்.

அஸ்தம்: உங்களின் திறமை ஒன்று வெளிப்படும். முயற்சியால் முன்னேறுவீர்கள்.

சித்திரை 1,2: எதிர்பாராத வேலைகள் முடியும். சகோதரிகள் உதவுவர்.

துலாம்: 

சித்திரை 3,4: பழைய கடனைத் தீர்க்க நல்லதொரு வழியை கண்டறிவீர்கள்.

சுவாதி: நற்செயல்கள் செய்வீர்கள். பெரியவர்களின் வாழ்த்தைப் பெறுவீர்கள்.

விசாகம் 1,2,3: பழைய கடனைப்பற்றி யோசித்துத் தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: 

விசாகம் 4: காணொலியின் மூலம் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அனுஷம்: தனிப்பட்ட வாழ்வில் பிரச்னை ஒன்றிற்குத் தீர்வு காண்பீர்கள்.

கேட்டை: பணியில் ஏற்படும் ஈடுபாட்டால் நன்மை கிட்டும். நிம்மதி வரும்.

தனுசு: 

மூலம்: பணியாளர்கள் பாராட்டப்படுவீர்கள். தாமதங்கள் இருக்கும்.

பூராடம்: மனம் விட்டுப்பேசும் நட்புடன் இனிதாகப் பொழுது போகும்.

உத்திராடம் 1: நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: அனுசரிக்கும் தன்மை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

திருவோணம்: வீண் பழி ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடாதீர்கள்.

அவிட்டம் 1,2: புகழ் பெறுவீர்கள். அன்பால் மற்றவர்களை வெல்வீர்கள்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: முக்கியமான நேரத்தில் விளையாட்டுத்தனமான செயல் வேண்டாம்.

சதயம்: பெரிய மனிதர்களிடம் கெத்து காட்டி பிரச்னையில் மாட்டாதீர்கள்.

பூரட்டாதி 1,2,3: உங்களின் முன்கால உழைப்பிற்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்: 

பூரட்டாதி 4: சகாக்களின் கேலிப் பேச்சுகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

உத்திரட்டாதி: மகிழ்ச்சியான நாள். யாரை நம்புவது என்கிற சந்தேகம் தீரும்.

ரேவதி: புதிய கலையை கற்பீர்கள். வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top