சோதிடம்

03.05.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: இனிமையான பேச்சினால் கவர்வீர்கள். இளைஞர்கள் வெற்றியடைவர்.

பரணி: புத்திசாலித்தனமான செயல் ஒன்றால் பாராட்டுப் பெறுவீர்கள்.

கார்த்திகை 1: பெரியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: கவரும் தன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் குதுாகலம் நிறையும்.

ரோகிணி: தொலைதுாரத்தில் உள்ளவர்கள் தொடர்பினால் நன்மை உண்டு.

மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரிக்கும். பணியில் வேகம் கூடும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: வார்த்தையை கவனமாக பயன்படுத்தினால் பிரச்னை இல்லை.

திருவாதிரை: சோர்வு குறையும். மனதாலும் யாருக்கும் தீமை நினைக்க வேண்டாம்

புனர்பூசம் 1,2,3: கடந்த சில நாட்களாக மனதில் இருந்த கவலை ஒன்று நீங்கும்.

கடகம்: 

புனர்பூசம் 4: நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்வதால் மன நிறைவு ஏற்படும்.

பூசம்: வெளியிடத்தில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆயில்யம்: அலுவலக வழக்குகளில் சாதகமான திருப்பம் இன்று ஏற்படும்.

சிம்மம்: 

மகம்: மகிழ்ச்சியான நிகழ்வுகளால் திக்குமுக்காடுவீர்கள். பாக்கிகள் வசூலாகும்.

பூரம்: பணியிடத்தில் இருந்த அரியர் தொகைகள் திடீரென்று வரும்.

உத்திரம் 1: பணம் புரண்டு சந்தோஷம் தரும். மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: பயம் நீங்கும். பிள்ளைகள் நிதானமாகத்தான் முன்னேறுவர்.

அஸ்தம்: ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பயணம் தள்ளிப்போகும்.

சித்திரை 1,2: பிரச்னைகளை தவிர்க்கும் வழிமுறைகளைக் காண்பீர்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: பிள்ளைகள் பரிசுகள் பெற்றுப் பெருமிதம் கொள்ளச் செய்வர்.

சுவாதி: உடல் நலத்தில் ஒரு சில தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும்.

விசாகம் 1,2,3: பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: 

விசாகம் 4: நண்பர்கள் உயர் நிலை அடைய உதவுவீர்கள். பயணத்தைத் தவிர்க்கவும்.

அனுஷம்: மதியத்திற்கு மேல் சிறப்பான பலன்களை பெற்று மகிழ்வீர்கள்.

கேட்டை: முக்கிய விஷயங்களில் இருந்த தேக்க நிலை அடியோடு மாறும்.

தனுசு: 

மூலம்: குடும்பத்தினரின் செயல்களில் கொஞ்சம் பிடிவாதம் இருக்கும்.

பூராடம்: புதிய முயற்சிகளில் உடனடியாக பலன் எதிர்பார்க்க வேண்டாம்.

உத்திராடம் 1: உடன் பிறப்புகளுக்கு உங்களால் நன்மைகள் ஏற்படலாம்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: பயணங்களின் போது பொருட்களை கவனமாகப் பாதுகாக்கவும்.

திருவோணம்: ஆரோக்கியத்தில் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.

அவிட்டம் 1,2: தம்பதி இடையே ஒற்றுமை கூடும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.

கும்பம்: 

அவிட்டம் 3,4: கடன்களை அடைப்பதற்கு உண்டான வழி கிடைக்கும்.

சதயம்: குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். பிள்ளைகள் உதவுவார்கள்.

பூரட்டாதி 1,2,3: பண வரவு தாராளமாக இருக்கும். தந்தைக்கு நன்மை உண்டு.

மீனம்: 

பூரட்டாதி 4: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும்.

உத்திரட்டாதி: இன்று தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ரேவதி: பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top