சோதிடம்

04.05.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்

அசுவினி: கவரும் தன்மை அதிகரிப்பதால் பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும்.

பரணி: சாத்தியம் இல்லாத விஷயம் ஒன்றைச் செய்து முடித்து மகிழ்வீர்கள்.

கார்த்திகை 1: பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய லாபம் காண முடியும்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பொருள் சேர்க்கை ஏற்படும். பங்குச் சந்தையில் லாபம் வரும்.

ரோகிணி: நல்லவர்களால் குடும்பத்திற்கு உதவியும், நன்மையும் கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: நேற்றிருந்த மனஅழுத்தம் முழுக்கத் தீரும். நிம்மதி ஏற்படும்.

மிதுனம் 

மிருகசீரிடம் 3,4: கடந்த நாட்களைவிட இன்று வியாபாரத்தில் லாபம் உயரும்.

திருவாதிரை: அதிகாரிகளுடன் அனுசரித்து போக வேண்டியது அவசியம்.

புனர்பூசம் 1,2,3: கடுமையான சொற்களைப் பயன்படுத்தி யாரையும் பகைக்க வேண்டாம்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் பேச்சிலும், செயலிலும் விவேகம் அதிகரிக்கும்.

பூசம்: மனதில் புது தெம்பும், உற்சாகமும் ஏற்படும். சில முயற்சிகள் கைகூடும்.

ஆயில்யம்: நிம்மதியான நாள். உடன்பிறப்பு மூலம் சிறு ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: 

மகம்: ஆன்மிக பணிகளில் நாட்டம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை கூடும்.

பூரம்: மதியத்திற்கு பிறகு நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.

உத்திரம் 1: மனதில் கருணை உருவாகி நற்செயல்கள் செய்வீர்கள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: உடல் ஆரோக்கியத்தில் சிறிய தொந்தரவு வரலாம்.

அஸ்தம்: இன்று சிறிய அளவில் செலவு ஒன்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

சித்திரை 1,2: வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும்.

துலாம்: 

சித்திரை 3,4: நெருங்கிய சொந்தங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சுவாதி: கணவன் மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விசாகம் 1,2,3: நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிநாடு பயணம் செல்ல ஏற்பாடாகும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: நல்ல விஷயங்களிலும், பொதுப் பணியிலும் ஈடுபாடு உண்டாகும்.

அனுஷம்: குடும்பத்தில் வரவேற்கத்தக்க மாற்றமும், முன்னேற்றமும் வரும்.

கேட்டை: நட்பு வட்டத்தில் உங்களின் கவுரவம் உயரும். சுபச்செலவுகள் கூடும்.

தனுசு: 

மூலம்: இளைஞர்கள் நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

பூராடம்: புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் சற்றுக் குறைவாகவே கிடைக்கும்.

உத்திராடம் 1: எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையாக இருக்கவும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: உங்களின் பெருமையை அறிந்து சிலர் உங்களை நாடி வருவர்.

திருவோணம்: அடுத்தவர்களுக்காக உதவி செய்வதால் உற்சாகம் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2: வாழ்க்கைத் தரம் உயரும். கணவன் மனைவிக்குள் புரிதல் அதிகமாகும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: தேவையற்ற பயங்களை தவிர்ப்பதால் நிம்மதி அதிகரிக்கும்.

சதயம்: உறவினர்களால் நிம்மதி கிடைக்கும். உங்களின் ரசனை அதிகரிக்கும்.

பூரட்டாதி 1,2,3: கடன் வாங்கும் எண்ணத்தை கை விடுவது மிகவும் நல்லது.

மீனம்: 

பூரட்டாதி 4: வாகன யோகம் உண்டு. கலைகளில் ஆர்வம் கொள்வீர்கள்.

உத்திரட்டாதி: மருத்துவ செலவு ஏற்படலாம். வழக்குகளைத் தள்ளிவைப்பது நல்லது.

ரேவதி: தாயாருக்கு நன்மை நடக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top