தற்போதைய செய்தி

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம்

பாகிஸ்தானில் லாகூரிலிருந்து, வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்துக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து,  ஹசன் அப்தல் என்ற இடத்தில் வந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பயணிகள் 13 பேர் பலியாகினர். மேலும் 25- பேர் காயம் அடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  காயம் அடைந்தவர்களில் பலரின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top