கட்டுரைகள்

ஒரு வீட்டு வரவு செலவை எவ்வாறு சமாளிக்கலாம் - இதோ இலகு வழி

ஒரு வீட்டு வரவு செலவு பட்டியலை தயாரிப்பது ஒரு பெரிய வேலையாகதென்படும். ஆனால் இது ஒரு இலகுவான விடயமாகும். இதன் நோக்கம் என்னவென்றால் வருமானத்தில் வரும் செலவுகளை பட்டியலிட்டு ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்ப்பதாகும்.

முதலில் ஒரு பட்டியலில் வருடம் முழுவதும் ஏற்படும் அனைத்து செலவுகளையும் குறிப்பிடுங்கள். ஒவ்வொரு மாதமும் ஏற்படாத செலவுகளை மாதாந்த செலவுகாளாக மாற்றி கணக்கிடுங்கள். இணையதளத்தில் இவ்வாறு கணக்கிடும் பட்டியலை வடிவத்ததை நீங்கள்காணலாம். 

இது முக்கிய விடயங்களை ஏற்கனவே கொண்டுள்ளதை அவற்றை நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும். இதன்பின் அனைத்து வருமானங்களையும் பட்டியலிடுங்கள். அதன்பின் நீங்கள் கீழே இறுதியாக வரும் பெறுபேற்றை கவனியுங்கள்.

இந்த வரவு செலவு பட்டியில் சமநிலையாகவும் மற்றும் சாதகமாகவும் வித்தியாசத்தை காட்டுமானல்>அனைத்தும்நன்றாகஉள்ளது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணத்தை சேமிப்பதுடன் அதை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். வரவு செலவை கணக்கிடும் போது முதல் சுற்றில் ஒரு பற்றாக்குறை காணப்படுமானால் நீங்கள் மீண்டும் அந்த பட்டியலை பரிசீலிப்பதுடன் செலவுகளை குறைக்க வேண்டும்.

சிறியதொகை குறையுமாக இருந்தால் அதை விரைவாக சரி செய்யலாம். பற்றாக்குறை பெரிதாக இருந்தால் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கையாக வீட்டைமாற்றுதல் அல்லது வாகனத்தை விற்றல் போன்றவை தேவைப்படும்.

இதை அதிக வேளையில் குறுகியகாலத்தில் மாற்றி கொள்ளமுடியாது. வரவு செலவு பட்டியலை வருடத்தில் பல தடவை பரிசீலிப்பதுடன் எங்கு தேவைப்படுகிறதோ அதில் சமப்படுத்திக்கொள்ள வேண்டும். எவராவது விரும்பினால் அவர்கள் ஒரு துறைசார் நிலையத்தில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். இணையத்தளத்தில் வரவு செலவு பட்டியலின் பிரதிமற்றும் இணையத்தில் நேரடியாக கணித்துக்கொள்ளும் வசதி உள்ளது.

இணையத்தின் இணைப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளது. அதனை பிரயோகித்து உங்கள் வரவு செலவை சரிபாருங்கள். 


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


மேலும் கட்டுரைகள்

Back to Top