கட்டுரைகள்

புனித றமழானின் இறுதிப் 10 நாட்களில், அதிகமான நன்மைகளை அடைந்துகொள்ள இலேசான முறை

புனித றமழானின் இறுதிப் 10 நாட்களில், அதிகமான நன்மைகளை அடைந்துகொள்ள மிக இலேசான முறை ஒன்றை, மக்கா இமாம் சேய்க் மாஹிர் அவர்கள் கூறுகிறார்கள்:

1.இறுதிப்பத்தில், ஒவ்வொரு நாளும், ஒரு தீனார் (குறிப்பிட்ட சிறு தொகைப் பணம்) தர்மம் செய்து வந்தால், இதில் ஒரு நாள் கொடுத்த தர்மம், நிச்சயமாக லைலதுல் கத்ர் இல் கொடுபட்டிருக்கும்! அப்போது, அது ஒவ்வொரு நாளும் 84 வருடங்கள் தொடர்ந்து தர்மம் செய்த நன்மைகளை அள்ளித்தந்துவிடும்!

2.இதேபோல், ஒவ்வொரு இரவும், (நள்ளிரவுக்குப் பின் கியாமுல் லைல்) இரண்டு ரகஅத்துகள் தொளுது வந்தால், லைலத்துல் கத்ர் இரவில் தொழுதது, 84 வருடங்களாக தொடர்ந்து தினமும் தொழுதுவந்த நன்மை கிடைக்கும்!

3.மேலும், இதேபோல், ஒவ்வொரு இரவும், சூரத்துல் இஃக்லாசை, 3 முறை ஓதி வந்தால், லைலத்துல் கத்ர் இரவில் ஓதியது, 84 வருடங்களாக தொடர்ந்து தினமும் முழுக் குர்ஆனையும் ஓதிவந்த நன்மையைத் தரும்!

4.இந்தச்செய்தியை பரப்புவதும், அல்லாஹ் நாடினால், பெரும் நன்மைகளை அள்ளித்தரும்!

இதை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள்... யாரோ ஒருவர் திருந்துவதற்கு நீங்கள் காரணமாக அமையலாம்.

மேலும் கட்டுரைகள்

Back to Top