ஆரோக்கியம்

யாழ் போதனா வைத்தியசாலையில் 4 கொரோனா மரணங்கள் பதிவு

செய்தி: Shankavi

நேற்று வரையான 24 மணித்தியாலத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி உயிரிழந்தவர்களில் அராலியை சேர்ந்தவர் 49 வயதான ஆண் என்றும், குருநகர் 2ஆம் குறுக்குத் தெருவை சேர்ந்த 45 வயதான பெண்ணொருவர், இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததுடன் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது. 

குருநகரை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் சென்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைில் கொரோனா தொற்று உறுதியானது. கோப்பாய் சிகிச்சை மையத்திற்கு அவர் அனுப்பப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை மோசமானதையடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மீளவும் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

இவர்கள் தவிர, யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பருத்தித்துறை வீதியிலும் ஒரு கொரோன மரணம் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.மேலும் ஆரோக்கியம்

Back to Top